செயல்பாடுகள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான வன்முறையினால் பாதிக்கப்பட்டோர்க்கு உதவிக்கரம்

நமது சமூகத்தில் பெருகி வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறையினால் பாதிப்பிற்கு உள்ளாவோர்க்கு, உளவியல் ரீதி மற்றும் சட்ட ரீதியாக அவர்களுக்கான உரிமையை நிலைநாட்டும் செயல்பாடுகளை எமது குழுமம் தீர்க்கமாக முன்னெடுக்கிறது.

இலவச பயிற்சி பட்டறை

ஒவ்வொரு பெண்களும் சுய மரியாதையுடன் வாழ, அவர்களுக்கு பயிற்சி பட்டறை மூலமாய் கணினி பயிற்சி, அழகுக்கலை பயிற்சி, வாகன ஓட்டுநர் பயிற்சி, விவசாய கல்வி போன்ற பலதரப்பட்ட தொழிசார்ந்த பயிற்சிகளை இலவசமாய் அளிப்பது

இலவச சட்ட ஆலோசனை சேவை

இந்த சமூகம் எங்கெல்லாம், பெண்களுக்கு நீதியையும், உரிமையையும் மறுத்து, அவர்களை புறந்தள்ளும் போது அவர்களுக்காக உரக்க பேசி, அவர்களோடு துணை நின்று, சட்ட வழியில் போராடி அவர்களின் உரிமையை சட்ட தரணிகள் மூலமாய் பெற்று தருவது

உயர் கல்வி மற்றும் சுய தொழிலுக்கான கடனுதவி

பேரார்வமும், தகுதியும் உள்ள பெண்களின் உயர் கல்வி மற்றும் தொழில் சார்ந்த தேவைகளுக்கான கடன்தொகையை வட்டியில்லாமல் கொடுத்து, அவர்கள் இலக்கை அவர்கள் அடைந்து இச்சமூகத்தில் பட்டொளி வீசி பிரகாசிக்க கிரியாஊக்கியாய் இருப்பது.

சுய தொழில் தொடங்க வாய்ப்பு உருவாக்குதல்

தற்கால பெண்கள் முன்னேற்றம் என்பது அவர்களின் தனி மனித பொருளாதார நிறைவை வைத்தே தீர்மானிக்கப்படுவதால், அவர்களின் சுய தொழில் எண்ணத்தை ஊக்குவிப்பது மற்றும் அவர்களுக்கான தொழில் சார்ந்த அறிவை செறிவூட்டுவது.

மது போதை அடிமை மீட்பு மற்றும் மறுவாழ்வு உதவிகள்

தங்கள் குடும்பத்தினர் மது மற்றும் போதை அடிமைத்தனத்திலிருந்து வெளிவர அனைத்து விதமான உதவிகளையும் பெண்களுக்கு செய்வதோடு மட்டுமல்லாது,  மறுவாழ்விற்கான சிறப்பான அடித்தளத்தை நிபுணர்கள் துணை கொண்டு அமைத்து கொடுப்பது.