எம்மைப்பற்றி
என்லைடென்
இலவசத்திற்கு அடிமையாகாமல் நம் வாழ்க்கைக்கு தேவையானவற்றை நாமே உருவாக்கி கொள்ள வேண்டும். அதற்கான முயற்சியும் பயிற்சியும் மட்டுமே நம்மை செம்மைபடுத்தும்.
நமது எதிர்கால சந்ததியினர் யாரிடமும் கை ஏந்தி நிற்கவிடாமல் தடுப்பதற்கான சூழலை, அறிவுசார் ஒரு புரட்சியினால் வென்றெடுக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.
பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் பொருளாதார முன்னேற்றத்தில் பின் தங்கி உள்ளார்கள். பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்து கொண்டிருக்கும் தடைகளை உடைத்து வாழ்வில் முன்னேற, உங்களுடன் கை கோர்க்கிறது என்லைடென் குழுமம்.
திருமதி ராஜேஸ்வரி பிரியா
செயற்பாட்டு தலைவர் - என்லைடென் குழுமம்.
தென்தமிழகத்தில் பிறந்து வளர்ந்தாலும், தமது அலுவல் காரணாமாய் வெளிநாட்டில் குடிபெயர்ந்தவர்.
மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை என்கிற சொல்லிற்க்கேற்ப, தமது மனதில் உரமேறிப்போன அதீத சமூக பற்றினால் 2015 ஆம் ஆண்டில் தமது பணியை துறந்து விட்டு தாயகம் திரும்பினார்.
தமிழகம் வந்து சேர்ந்த பின், குமரி தொட்டு தமிழக தலைநகர் வரை பல்வேறு சமூக மற்றும் அரசியல் பணிகளை அடித்தட்டு மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தார்.
பண்பாட்டில் உயர்ந்து நிற்கும் நமது பெண்டிர், பொருளாதார தன்னிறைவை அடையாமல் போன காரணத்தினால் சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் பேரின்னல்களை களைந்தெடுக்கும் நோக்கத்தில், அறிவினால் ஒரு மாபெரும் புரட்சியை திருமதி ராஜேஸ்வரி பிரியா செய்ய தீர்மானித்ததன் விளைவே – இந்த என்லைடென் குழுமம்.